திருப்பூர் மதுபானக் கூடத்தில் இளைஞரைத் தாக்கிய ஊழியர்கள் - வைரல் வீடியோவால் பரபரப்பு!

திருப்பூரில் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவரை கடை ஊழியர்கள் கம்பால் சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். இதை மதுஅருந்த வந்த ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அந்த வீடியோவில், முதலில் கைகளால் தாக்கிய மதுபானக்கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும், கழுத்தை நெரிப்பதும் பின்னர் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.



இந்த வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...