கோவை ரேஸ்கோர்சில் நடைபயிற்சி செல்வோர் அவசர உதவிக்கு குறைதீர் போலீசார் நியமனம்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக தெரிவிக்க வசதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக நடைபாதையை ஒட்டிய பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து பணியாற்றும் வகையில் ஒரு ஆண், ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்த காவலர்கள், தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் பணியில் இருப்பார்கள். இவர்களிடம் சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்பட அனைத்து வித துறைகள் சார்ந்த பிரச்னைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதை பதிவு செய்து கொள்ளும் அங்குள்ள போலீசார், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளிப்பார்கள்.

அவர்கள் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் போலீசாருடன் தொடர்பில் இருப்பர். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...