போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருக்க வேண்டும்..! - போலீசாருக்கு அமைச்சர் சாமிநாதன் அறிவுரை

திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சாலை விபத்துகளை குறைப்பது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.



இதில் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் ஒழிப்பு, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து போலீசார் செயல்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருக்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை போலீசார் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...