கோவையில் சிறுமி பாலியல் வன்டுகொடுமை வழக்கு - சித்தப்பாவிற்கு 20 ஆண்டு சிறை

கோவையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவிற்கு போக்சோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டணையும், அபராதமும் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டில் அவரின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார். அப்போது, சிறுமியை அவரது சித்தப்பா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பாவிற்கு 22 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

Festive Season: Special Trains to Operate Between Chennai and Kollam via Coimbatore

Southern Railway will operate weekly special trains between Chennai and Kollam via Coimbatore, Salem and Erode from Octo...

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...