கோவை பன்னிமடையில் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு - திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்!

கோவை பன்னிமடையில் பொதுமக்கள் நிதியில் ரூபாய்.2.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பன்னிமடை, கணுவாய், தாளியூர், கஸ்தூரிநாயக்கன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்த அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க பன்னிமடை கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.25 லட்சம் பணத்தை திரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் இரவு-பகல் என பாராமல் அலுவலக கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடித்து புதியதாக கட்டினர். மேலும்,அங்கு பாத்ரூம், தண்ணீருக்காக மோட்டார் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக புதிய கிராம நிர்வாக அலுவலகம் போர்டு என அனைத்தும் உருவாக்கப்பட்டது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கே.கிருஷ்ணகுமார், துடியலூர் வருவாய் அலுவலர் சரத், பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி கவுன்சிலர்கள் பி.டி.கோபாலசாமி, தங்கராஜ், சிவகுமார், சாந்தி, மாரித்தாய், ஜெயமணி,



அஞ்சல் அதிகாரி டி.பி.ராஜேந்திரன் குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் தண்டபாணி, சம்பத்குமார், மகேந்திரகுமார், ராஜசேகரன், விஜயகுமார், அய்யாசாமி, காளியப்பன், துடியலூர் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, அலுவலர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...