பல்லடம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - இருவர் கைது!

பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்கு வந்த 2 போதை ஆசாமிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடை உரிமையாளர் வினோத்தை தாக்கியது மட்டுமல்லாமல் கடையையும் அடித்து சேதப்படுத்திய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையை அடித்து நொறுக்கி உரிமையாளரையும் தாக்கிய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் கடந்த நான்கு மாதங்களாக செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் இவரது கடைக்கு வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவர் மொபைலுக்கு சார்ஜ் போட தனது கைபேசியை கடையில் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து வினோத்தின் கடைக்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர் வாய் பேச முடியாத பெண் குறித்து கேட்டுள்ளார்.



திடீரென அந்த பெண் குறித்து ஆபாச வார்த்தைகளில் பேசியபடி கடையில் இருந்த வினோத் மற்றும் அவரது தம்பி முத்து ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.



பின்னர், 10 நிமிடங்களில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் வினோத்தின் கடைக்கு வந்த அந்த நபர் வெளியே வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையை எடுத்து வினோத்தின் மீது சரமாரியாக தாக்கி கடையையும் அடித்து நொறுக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் வினோத் கையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, வினோத் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 நபர்களையும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பல்லடத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வடிவேல் மற்றும் பச்சாபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் ஆகிய இரண்டு பேரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கடை உரிமையாளர் வினோத் மீது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...