ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் குழந்தைகள் மன நலம் குறித்த சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் குழந்தைகள் மன நலம் குறித்த சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மைன்ட் மேட்டர்ஸ் நிறுவனத்தின் டாக்டர் கலா ராஜகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆட்டிசம் குறைபாடு ஆண் குழந்தைகளிடமே அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 15 பேரில் ஒரு குழந்தை இந்த நோயால் தாக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் உள்ள மாற்றங்கள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர். உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுவது என்பது குறித்து நீங்கள் கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு குறை உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் பொறுமையான அனுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு புதிய திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை பாராட்ட வேண்டும். நீங்கள் அவர்களை பராமரிப்பது குறித்து அவர்களுடன் உரையாட வேண்டும்" என்றார்.



அவர் மேலும் கூறுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால் அவர்களுக்கான வாய்ப்பினை அவர்களே தேர்வுசெய்ய சுட்டிக்காட்ட வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நெரிகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். சமூக நியதிகள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏதேனும ஒரு வகையில் பிரச்சனைகள் இருக்கும். பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு அறிவுரை கூறி வழக்கமான பாதையில் திரும்ப உதவ வேண்டும். பெரும்பான்மையான குழந்தைப் பருவம் பள்ளியிலோ, அல்லது வீட்டிலேயோ கழிகிறது. அதனால், வீடு, பள்ளி போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒரு தேர்ந்த நிபுணராக செயல்பட வேண்டும்' என்றார்.



தொடர்ந்து, மன நல வளர்ச்சி குறைபாடு, புத்திக் கூர்மை செயலாற்றல், மேலாண்மை, குறிப்பிட்ட வளர்ச்சிக் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், மெதுவாக கற்றுக்கொள்வோர், மேலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், ரெட்ஸ் குறைபாடு, சிடிடி, ஏஸ்பெர்ஜெர்ஸ் குறைபாடு, பிடிடி என்ஓஎஸ், ஏடிஎச்டி, டிஐசி குறைபாடு, பேச்சுக் குறைபாடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.



இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.பாபாஞானகுமார் துவக்கி வைத்தார். சமூக பணி துறைத் தலைவர் முனைவர் ஏ.அழகர்சாமி, பேராசிரியர் சங்கீதாபால், பி.மோகனபிரியா, வி.வைஸ்னவி மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...