தாராபுரம் அருகே ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் - அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம்

மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் அலங்கியம் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...