பல்லடம் அருகே குட்டையில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்!

பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கழிவுநீரை கரைப்புதூர் கிராமத்தில் உள்ள குட்டையில் திறந்து விடுவதை கண்டித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் பழமை வாய்ந்த ஓடை மற்றும் குட்டை அமைந்துள்ளது.

ஆறு போன்று அகலம் கொண்ட இந்த ஓடையில், இரண்டு தடுப்பணைகளும் ஒரு அணைக்கட்டும் உள்ளது. மழைக்காலங்களில் இங்கு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீராதாரமாகவும் இந்த ஓடை அமைந்துள்ளது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஓடையால் பயன்பெற்று வரும் நிலையில், இந்த ஓடையில் ஏற்கனவே குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வழிப் பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.



இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, அப்பகுதி மக்களின் நீராதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அருகிலுள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீரை இந்த ஓடையில் கலப்பதாக கூறி கரைப்புதூர் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், கழிவு நீர் ஓடையில் கலப்பதை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, கரைப்புதூர் கிராம மக்கள் திடீரென 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குட்டையில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...