மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது..! - பொள்ளாச்சியில் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் PRK குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி,

பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி கலந்துகொண்டார். பொதுகூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.



திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...