பல்லடத்தில் உழைப்பாளர் தினத்தில் அரங்கேறிய விபத்து - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலாளி காயம்!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் செயல்பட்டு வரும் E-STAR என்ற டீ தூள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியில் உள்ள 24 கழிப்பறைகள் இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற உழியர் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறை இடிந்து விழுந்ததில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள எம்.வி.எஸ் நகரில் E-Star என்ற டீ தூள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக 24 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை திடீரென 24 கழிப்பறைகளும் முழுவதுமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.



இந்த விபத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு காலில் காயமடைந்த நிலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமான அஸ்திவாரம் போடாமலேயே கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் தினத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...