தாராபுரம் அருகே உறவினர் வீட்டில் பாத்திரங்கள் திருட்டு - இளைஞர் உட்பட 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரங்களைத் திருடிய இளங்கோ என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒரு நபரான முத்துக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரத்தை திருடி சென்ற வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராமாத்தாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தோட்ட வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்த ராமாத்தாள், கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேல் கூரையில் ஓடு பிரித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை பார்த்தபோது, விலை உயர்ந்த பாத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துசாமி மகன் இளங்கோ (வயது 22) , என்பவர், தனது நண்பர் முத்துகுமார் (வயது35) என்பவருடன் சேர்ந்து ராமாத்தாள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து இறங்கி இருவரும் பாத்திரங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...