12 மணிநேர வேலை மசோதா வாபஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிலாளர் தினமான இன்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், திமுக கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை சிந்தாந்திரிபேட்டையில் இன்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார். மேலும் மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

12 மணி நேர வேலை மசோதா குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது. பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவுமே மசோதா கொண்டு வரப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்ற பின்னரும் அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டினார்.

விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை. அதனை பெருமையாக கருதுகிறேன். சட்டத்தை கொண்டு வரும் துணிச்சலும் அதை திரும்ப பெறும் துணிச்சலும் எங்களுக்கு உள்ளது. திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஐனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...