அதிமுக நிர்வாகி வீட்டின் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம் - ரூ.1.10 கோடி பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி தமது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் தினேஷ் மற்றும் லோகேஸ். இவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் மூலனூர் நத்தப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டின் முன்பு நேற்று அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துப் பேசிய ராமகிருஷ்ணன், “மூலனூரில் கோழி தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் தொழில் ரீதியாக என்னிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் பெற்றுள்ளார்.



ஆனால், அந்த பணத்தை 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறேன். தரவேண்டிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை திருப்பி தரும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...