மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ரூ.2.90 கோடிக்கு ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில், திருப்பூர், கோவை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் 12,651 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 3871.80 குவிண்டால் அளவிலான பருத்தியானது ரூ.2,90,39,292 க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 12,651 மூட்டை பருத்தி ரூ.2.90 கோடிக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,205 விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.



பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



இந்த ஏலத்தில், வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,572-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,700-க்கும் சராசரி விலை ரூ.7,700-க்கும் விற்பனையானது. மொத்தமாக 12,651 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 3871.80 குவிண்டால் அளவிலான பருத்தியானது ரூ.2,90,39,292 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் 31வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன் (பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...