கோவையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.39.30 கடனுதவி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.


கோவை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் ராமச்சந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஊரக தொழில்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும், உலக வங்கி நிதியுதவுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



புதிய தொழில்களை உருவாக்கவும் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 30% இணை மானியத்துடன் கூடிய கடன் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 இலட்சம் மதிப்பிலான 30% இணை மானியத்துடன் (11.79 லட்சம்) கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...