கோவை மாவட்ட வங்கிகளுக்கு நடப்பாண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கடன் திட்டப் புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்திற்கு 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்ட வங்கிகள் 2023-2024ஆம் ஆண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.



இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலா ராவ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக 35,170 கோடிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 15,000 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு 18,850 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு 1320 கோடி என மொத்தம் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7470 கோடி அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து RSETI யில் பயிற்சி பெற்ற 5 நபர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...