காஷ்மீர் குண்டுவீச்சில் பலியான ராணுவ வீரர்கள் - கோவையில் அகில பாரத இந்து மகா சபா புஷ்பாஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை துடியலூரில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ட்ரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபா தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும் தென்மாநில இளைஞர் அணி செயலாளருமான டாக்டர் கே.ஆர். சுபாஷ் தலைமை தாங்கினார்.



இதில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களுக்கு ஒவ்வொருவராக மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனந்தன் , செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்திபன், மாநகர் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் கணேசன், அர்ச்சகர் பிரிவு மாநில செயலாளர் கார்த்தி சுவாமிகள், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், ஜெயகுமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...