கிடப்பில் போடபட்ட கழிவுநீர் கால்வாயை முடிக்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் அன்னூர் கனேசபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் திட்டம் வெங்கடேஷ் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கபட்டது.

30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...