கோவையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கி கௌரவித்த மாவட்ட எஸ்.பி..!

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 22 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இந்த விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.



காவல் ஆய்வாளர் - 1, உதவி ஆய்வாளர்கள் - 5, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் - 2, காவலர்கள் - 14 என மொத்தம் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...