கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய மர்மநபர்கள் - மடக்கிப்பிடித்து இளைஞர்கள் அதிரடி!

கோவை வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்துவந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களை, உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் மடக்கிப்பிடித்து, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் எடுக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கேரளாவில் இருந்து எடுத்துவரப்படும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் அண்மைக்காலமாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக, கோவை வாளையாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பலமுறை எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.



இந்நிலையில், கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள், வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர். இதனைக் கண்ட உள்ளூர் இளைஞர்கள், அந்த நபர்களிடம் குறித்து கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர்.



இதையடுத்து, அந்த இளைஞர்கள், ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பதாகக்கூறி எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை அள்ளி ஆட்டோவில் திரும்ப எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...