வீட்டு வசதி வாரிய வீடுகளின் பத்திரங்களை வாங்க ரூ.53 கோடி வட்டி குறைப்பு - அமைச்சர் முத்துசாமி தகவல்!

வீட்டு வசதி வாரியம் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி வாரியத்தால் கொடுக்கப்பட்ட வீடுகளின் பத்திரங்களை வாங்குவதற்கான வட்டி ரூ.53 கோடி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.



கோவை: வீட்டு வசதி வாரியம் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.



கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டு வசதி துறையின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது, கணபதி பகுதியில் அனைத்து இடங்களிலும் வீட்டு வசதி துறையால் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறதா? பொதுமக்களுக்கு எப்படி விருப்பம் இருக்கிறது? என ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

அதன் அடிப்படையில், இன்று கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். கணபதி பகுதியில் 36 சென்ட் நிலத்தில் 5 தளங்கள் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 600 சதுர மீட்டர் சதுர அடி மொத்தமாக கட்டப்பட்டுள்ளது.

இது ஒரு வணிக வளாகம் இன்றைக்கு வாடகை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ஹவுசிங் போர்டு என்னென்ன விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என கேட்டுள்ளார். பத்து நாட்களில் அனுமதி கொடுத்த உடன் வாடகைக்கு விடப்படும்.

இந்த கட்டிடத்தை பொறுத்தவரை தரமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நல்ல வாடகைக்கு போகும் என நம்பிக்கை உள்ளது. மூன்று இடங்களை நாங்கள் பார்க்க உள்ளோம். வீடுகளும் தயார் நிலையில் உள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட 9,60 வீடுகள் மிகவும் மோசமாக இருந்தது. அது இடிந்த நிலையில் இருந்தது. 75 சதவீதம் பேர் காலி செய்துள்ளார்கள். அதன் பிறகு எங்களிடம் வந்து சொன்னார்கள்.

வீட்டு வசதி வாரியம் அவர்களை ஒருங்கிணைந்து கட்டப்பட்டு அங்கு உள்ள 960 வீடுகள் 4 அசோசியேஷன் ஒன்றிணைந்து சிங்கிள் அசோசியேஷனாக கமிட்டி மூலமாக அவர்களே ஒரு பில்டர் தேர்ந்தெடுத்து பணிகள் துவங்க உள்ளது. அதற்கு ஒரு சில சட்ட திருத்தங்களும் தேவைப்பட்டது.

செளரிபாளையம் பகுதியில் நாங்கள் ஆய்வு செய்தோம். சாலைகள் அகலப்படுத்த வேண்டியுள்ளது. அதனை ஒழுங்குப்படுத்தி கூடுதலாக ஏதாவது செய்ய முடியுமா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். சென்னை போன்ற மற்ற பகுதிகளில் 12 இடங்களில் இதுபோன்று கேட்டுள்ளார்கள். மோசமாக உள்ள கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர், எவ்வளவு கட்டடங்கள் கட்டப்படுகிறது? என எண்ணிக்கை என்பது தேவை இல்லை. அந்தக் கட்டிடம் தரமாக உள்ளதா? என கேட்டுள்ளார். ஜாயிண்ட்மெண்ட் வென்ச்சர் என்கின்ற மெதெடில் நாங்கள் கட்டிடம் தரமாக வந்தே ஆக வேண்டும் என ஆய்வு செய்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள 3000 வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது. பல்வேறு முயற்சிகள் செய்து ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகி உள்ளது. காவல்துறை மொத்தமாக எடுத்து வருகிறார்கள். இதனால், பெரும்வாரியான வீடுகள் விற்கப்படும். எந்த பகுதியில் வீடுகள் தேவை? என கண்டறிந்து பொதுமக்கள் வாங்குகிறார்கள். அடிப்படை வசதிகள் அறிந்து வீட்டு வசதி வாரியமும் கட்டி வருகிறார்கள்.

சட்டசபையில் 41 சங்கங்கள் எங்களை வந்து கேட்டுள்ளார்கள். அவர்கள் 44 கோரிக்கையிலும் வைத்துள்ளார்கள். 18 கோரிக்கைகள் செய்ய முடியாது என நிராகரித்துள்ளோம்.

வீட்டு வசதி வாரியத்தில் கொடுக்கப்படும் வீடுகள் பத்திரங்கள் இல்லாமல் உள்ளது? என்ற கேள்விக்கு ... வீட்டு வசதி வாரியத்தில் பல வீடுகளுக்கு பத்திரம் கொடுக்கவில்லை, வாங்கியவர்கள் கேட்கவில்லை. அந்த வீடுகள் தரமானதாக இல்லாமல் இருந்ததால் கட்டவில்லை. சில பேர் அந்த வீட்டை விற்று விட்டார்கள். அதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.

முதல்வருக்கு இது போன்ற பிரச்சனை மனுவாக வந்தது. அதற்காக பதினோராயிரம் பத்திரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான வட்டியை 53 கோடி ரூபாய் குறைத்துள்ளோம். அதனை 10 கோடியே 75 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.

வரும் மூன்றாம் தேதி வரை முடியவுள்ள நிலையில், அதனை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தரமான கட்டிடம் பற்றிய கேள்விக்கு ஜாயின் வென்ச்சர் இன்ஸ்பெக்சன் இடைஇடையே நடத்தப்பட்டு அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...