கோவை பொறியாளரிடம் பணமோசடி - சென்னை பட்டதாரி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என கோவை பொறியாளரிடம் அறிமுகமாகி நூதன முறையில் ஏமாற்றிய சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த முத்துபாலாஜியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கே.ஆர்.புரம் முருகன் கோயில் வீதியை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் (வயது54). மெக்கானிக்கல் இன்ஜினியர். இவருடன் சமூக வலைதளத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், ஆன்லைன் டிரேடிங் முறையில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய செந்தில் வடிவேல், ஒரு லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. இதனால் செந்தில்வடிவேல் தன் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டார். அதன்பிறகு அந்த நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த செந்தில் வடிவில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நம்பிக்கை மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரைத் தேடிவந்தனர்.



இந்த நிலையில், இணையத்தில் பழக்கமாகி பணம் பெற்று மோசடி செய்த அந்த நபர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி நவீன் என்கிற முத்து பாலாஜி (வயது33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து நவீன் என்கிற முத்து பாலாஜியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர் யார் யாரிடம் இதேபோல் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...