ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களை அலறியடித்து ஓட வைத்த அதிமுக நிர்வாகிகள்

வால்பாறையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவின் போது அதில் பங்கேற்றிருந்த அதிமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தொண்டர் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு நகர கழக செயலாளர் மயில் கணேஷ் தலைமை வகித்தார். பொன்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாய அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் சீதாராமன், ஜெபராஜ், அமீது ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர்.

இதைத்தொடர்ந்து ஜெபராஜ் பேசுகையில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவிற்கு இணையாக 301 ரூபாய் சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசுவிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அமீது பேசுகையில், முன்னால் பேசிய பொன் கணேசும், ஜெபராஜும் பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து, நாங்கள் என்ன தவறாக பேசினோம் என்று இருதரப்பினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதில் நாற்காலிகளை தூக்கி எறிந்து மோதல் ஏற்பட்டதால் தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். சில மணிநேரம் கழித்து மீண்டும் கூட்டம் துவங்கியது. 

இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், தமிழகத்தில் நிலையான அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்து 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் வழியிலேயே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படும். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 250 பேருக்கு ஒருவாரத்தில் இலவச பட்டா வழங்கி அரசு மாணியத்தில் வீடு கட்டித்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல செயல்பட வேண்டும்" என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் நரசப்பன், வழக்கறிஞர் பெருமாள், கோழிக்கடை சண்முகம், மிச்சர் முருகன், சசி, மோகன், செல்வகணேஷ், நெல்லைச்செல்வன் ஆகியோர்களும் கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...