கோவை அரசு கல்லூரியில் பொதுநிர்வாக மன்ற விழா - மாநகராட்சி ஆணையாளர் மாணவர்களுக்கு ஆலோசனை

கோவை அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை மன்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்‌, மாணவர்களை ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ UPSC தேர்வில்‌ எப்படி எளிதாக தோர்ச்சி பெறுவது என்பது குறித்தும்‌ ஆலோசனைகளை வழங்கினார்‌.


கோவை: அரசு தேர்வில் எளிதாக தேர்ச்சிப் பெறுவது குறித்து மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆலோசனை வழங்கினார்.

கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரியில், பொது நிர்வாகத்துறை மன்ற விழா 2022-23 கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கலந்து கொண்டு மன்ற விழாவினை தொடங்கி வைத்தார்‌.

அப்போது அவர் பேசியதாவது, கோயம்புத்தூர்‌ அரசு கலைக்கல்லூரி பொது நிர்வாகத்துறை சார்பில்‌ நடத்தப்படுகின்ற, இந்த மன்ற விழாவில்‌ பங்கேற்பதில்‌ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்‌.



மாணவர்கள்‌ ஆர்வமுடனும்‌, அக்கறையுடனும்‌ UPSC உள்ளிட்ட அரசுத்‌ தோ்வுகளுக்கு படிக்க வேண்டும்‌. எனவே பொது நிர்வாகத்துறையில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ பல்வேறு அரசு போட்டித்தோவுகளை எழுத முன்வர வேண்டும்‌. என்ன படிக்கலாம்‌ என்பது குறித்து உயர்வான எண்ணங்களை IAS, IPS, IRS, போன்ற உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என எண்ணி படிக்க வேண்டும்‌.

அப்படி எண்ணி படித்தால்‌ மட்டுமே உயர்‌ பதவியை எட்ட முடியும்‌. மாணவர்கள்‌ படிக்கும்போது தினசரி நாளிதழ்களை படிக்கும்‌ எண்ணத்தை வளர்க்க வேண்டும்‌. அன்றாட வாழ்வில்‌ நாளிதழ்கள்‌ வாசிப்பது மிகவும்‌ முக்கியமானதாகும்‌.

மேலும்‌, போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு நூல்களை படிப்பதற்கு திட்டமிட்டு, காலத்தை ஒதுக்கி அக்கறையுடனும்‌, ஆர்வத்துடனும்‌ படிக்க வேண்டும்‌. இன்றைய அறிவியல்‌ வளர்ச்சியில்‌ பல்வேறு தனியார்‌ பயிற்சி மையங்களுக்கு சென்று தான்‌ படிக்க வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. அறிவியல்‌ தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ளது.

WhatsApp, Websites, YOUTUBE, GOOGLE போன்ற வழிகளில்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு படிக்க தேவையான நால்கள்‌ கிடைக்கின்றன. எனவே மாணவர்கள்‌ தங்கள்‌ வாழ்வினை மேம்படுத்திக்‌ கொள்ள உயர்‌ பதவிகளுக்கு வர வேண்டும்‌ என உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்‌ என்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...