இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை : தி இந்து நாளிதழின் செய்தியாளர் சவுந்தர்ய ப்ரீத்தா பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இரண்டாவது நிகழ்வாக இன்று பயிற்சிப் பட்டறை துவங்கியது.  இந்த நிக்ழவில் "தி இந்து" நாளிதழின் செய்தியாளர் சவுந்தரிய ப்ரீதா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.  'ஊடகவியலாளர் நெறிமுறைகள் மற்றும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:- 



இன்றைய காலகட்டத்தில் பலர் தொழில்துறை சார்ந்த செய்திகளை படிப்பதில்லை. ஊடகவியலாளர்களிடையேயும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பில் சில தயக்கம் தெரிகிறது. கோவை மாநகரம் முழுக்க முழுக்க தொழில் துறை சார்ந்த நகரம். இத்துறை சார்பில் செய்தியாளர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது மாவட்டத்தில் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும். 

தொழில் துறை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுடைய பிரச்சனைகளினூடே அச்செய்தியை கொடுக்க வேண்டும். அதோடு, சாதக மற்றும் பாதகங்களையும் மிக எளிமையான நடையில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.



தற்போது, கோவையில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவனமும், புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் தங்கள் பங்குகளை முதலீடு செய்கிறார்கள். இது தவிர பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கோவையில் தொடங்கபட்டு வருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பை பெருகின்றனர். எனவே, இது முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த செய்திக்களமாக உள்ளது. இளம் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு முறையை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது, மூத்த பத்திரிக்கையாளர் அல்லது வல்லுனர்கள் அலோசனைகளை கேட்டறிந்து செய்தி சேகரித்தால் உள்ளூர் செய்தி ஒன்றையும் தேசிய செய்தியாக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் செயலாளர் ஷாதிக் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...