கல்லூரியில் இருந்து என்னை யாரும் காதலிக்க வில்லை..! - கோவையில் நடிகர் விக்ரம் கலகலப்பான பேச்சு!

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான். நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்று கோவையில் நடந்த பிஎஸ்-2 புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் தெரிவித்தார்.


கோவை சரவணம்பட்டி ப்ரோசோன் தனியார் மாலில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், மேடையில் அருள் படத்தின் பாடலை ரசிகர் மத்தியில் பாடி பேச்சை தொடங்கினார்.



அப்போது விக்ரம் பேசியதாவது:

நான் பேச நினைத்ததை எல்லாம் திரிஷா பேசிவிட்டார். ரசிகர்களை பார்த்து I LOVE YOU, நாங்கள் அனைவரும் உங்களை காதலிக்கிறோம். படங்களுக்கு படம் உடலை மாற்றிக் கொண்டே இருப்பேன். மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது, அப்போது ஜாலியாக இருந்தது.

சாப்பிட்ட சாப்பாடு இன்றுவரை உடம்பில் உள்ளது. நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள். அந்நியன் திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.

பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இது எங்க படம் என்பதைத்தாண்டி, இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பிஎஸ் 2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடின அளவுக்கு வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும்.

இந்த படத்தின்போது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டோம். இந்த படம் ப்ரோமோஷனுக்காக செலவழித்த நேரம் அதிகம். இத்தனை நடிகர்கள்கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அனைத்து நடிகர்களும் இதில் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு, விக்ரம் தெரிவித்தார். அப்போது, ரசிகர்கள் தங்கலான் திரைப்படம் குறித்து அப்டேட் கேட்டு முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம், அந்த திரைப்பட புரமோஷனின்போது அதனைப்பற்றி பேசி கொள்ளலாம் என்றும், அந்த சூட்டிங்கில் இருந்துதான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். மேலும், படத்தின் இயக்குநர் ரஞ்சித் உங்களிடம் ஹாய் சொல்ல சொன்னதாகவும் ரசிகர்களிடம் விக்ரம் தெரிவித்தார்.

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான், இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான், நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்றும் நடிகர் விக்ரம் அப்போது கூறினார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...