திமுக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை இன்னும் 15 நாட்களுக்கு சமர்பிக்கவில்லை என்றால் வழக்குத் தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக வாங்கி குவித்துள்ளதாக பட்டியல் வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை காட்டவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50 ஆயிரத்து 219 கோடி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.5,442.39 கோடி, அமைச்சர் உதயநிதிக்கு ரூ.2,039 கோடி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரூ.1,023.22 கோடி, மைச்சர் கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, எம்.பி. கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி, டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,841.10 கோடி, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமிக்கு ரூ.2,923.29 கோடி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது கவுதம் சிகாமணிக்கு ரூ.581.20 கோடி என சொத்துக்கள் உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இவை என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுகவினரின் சொத்து பட்டியலுக்கு அண்ணாமலை ஆதாரம் தர வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணாமலை மீது திமுகவினர் தனித்தனியாக வழக்கு போடுவார்கள். ஜூனில் அவர் பாத யாத்திரை போக மாட்டார். கோர்ட் கோர்ட்டாக தான் போவார் என்றார்.
திமுக சார்பில், திமுகவிற்கு ரூ.1408.9 சொத்துள்ளதாகவும், திமுகவிற்கு ரூ.3418 கோடியில் உள்ளதாகவும், அதேபோல் திமுக சார்பில் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் ரூ.34,184.71 கோடியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றிற்கான சொத்துப் பத்திரங்கள் மற்றும் ஆதாரங்களை இன்னும் 15நாட்களுக்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அமைப்புச் செயலாளரான என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.