கோவையில் மதநல்லிணக்க இப்தார் விருந்து - அனைத்து மதத் தலைவர்கள் பங்கேற்பு!

கோவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.



இதற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி முன்னிலை வகித்தார்.கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஹாஷ் சிக்ஸ்ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ்,

அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் முகம்மது அலி, தலைமை இமாம் அப்துல் ரஹீம் இம்தாதி, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர், சி.எஸ்.ஐ.திருமண்டல உறுப்பினர் பிரவீன் விமல்,தி.மு.க.பகுதி செயலாளர் ரவி, 45 வது மாமன்ற உறுப்பினர் சுதா ரவி,மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்களும் சிறப்புரையாற்றினர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரீச்சை, நோன்பு கஞ்சி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபி, கோவையில் மத நல்லிணக்கத்தைப்போற்றும் விதமாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதாகவும், அதேபோல இந்த இப்தார் நிகழ்வும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...