வரலாற்று சின்னமாக மாறும் கல்லாறு தூரிப்பாலம்!

கோவை மாவட்டம் கல்லாறு பகுதியில் ஆங்கிலேயர்களால் கடந்த 1924-ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை புனரமைத்து இதனை நினைவுச் சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


கோவை: கல்லாறு தூரிப்பாலத்தை வரலாற்று சின்னமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1924-ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.

அதன்பின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது.

அதன்பின் இப்பகுதியிலுள்ள தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது. இருப்பினும் 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது.

இதையடுத்து இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. இதையடுத்து ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை புனரமைத்து இதனை நினைவுச் சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் தங்கவேலு கூறியதாவது,

கல்லாறு பகுதியில் பழமை வாய்ந்த தூரிப்பாலமாக இது உள்ளது. இதனை பாதுகாப்பது ஊராட்சி சார்பில் எங்களுக்கும் கடமை உண்டு. இதனிடையே பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பராமரித்து இப்பகுதியில் பூங்கா அமைக்க அரசிடம் ஆலோசனை கேட்டு வருகிறோம்.

முதல் கட்டமாக இப்பாலத்திற்கு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் அரசு அனுமதியுடன் இப்பாலத்தை நினைவு சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...