பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு - உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் காலியிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து 50 சதவீதம் வரியை குறைத்து தமிழக அரசு கடந்த வாரம் ஏப்ரல் 4 தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.



ஆனால், 50 சதவீதம் குறைத்தது பொதுமக்களுக்கு போதாது என்றும், இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சிகளில் சொத்து வரிகள் உள்ளதுபோல் பொள்ளாச்சி நகராட்சியிலும் சொத்து வரியை கொண்டு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



காவல்துறை தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200.க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் பொள்ளாச்சி நகராட்சி முன்பு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி மாவட்ட உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 300.க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.



பாஜகவினர் அனுமதியை மீறி கோசங்களை எழுப்பி வாறு நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தபொழுது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...