பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.



இவருக்கு இரண்டு மகன்களில், சம்பத்குமார் என்பவர் மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதால் வீட்டிலேயே உள்ளார்.



இவரது வீட்டிற்கு அருகில் சீமான் என்பவர் கண்ணாடி துகள்களை பயன்படுத்தி திருமண அலங்கார பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருவதால், தனது மகனுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு தொழில் செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...