தமிழகத்தின் புலிகள் காப்பகங்களின் செயல்பாடு - பாராட்டி அங்கீகாரம் அளித்த மத்திய அரசு!

இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.


புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புலிகள் எண்ணிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்டார்.

அதன்படி, இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டைவிட, தற்போது 6.7% அதிகரித்து இந்தியாவில் 3,167 புலிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 2,967ஆகும்.

1960 ம் ஆண்டு காலக்கட்டங்களில், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைந்து வந்ததால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 1968ம் ஆண்டு புலிகளை வேட்டையாட தடை கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு வன விலங்குகள், காடு, பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'வன உயிர் பாதுகாப்புச் சட்டம்' அமல்படுத்தப்பட்டது.

இதன் நீட்சியாக, குறைந்து வந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு 1973ஆம் ஆண்டு,'புலிகள் பாதுகாப்பு திட்டம்' என்ற திட்டத்தை அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி நடைமுறைப்படுத்தினார். அதையடுத்து, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் காடுகளில் வாழ்ந்த புலிகளை பாதுகாக்க, 9 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

அந்த வகையில், கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயம், உத்தரகண்டில் கார்பெட் தேசியப் பூங்கா உட்பட மொத்தம் 9 புலிகள் காப்பகங்கள் 18 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகள் வாழும் காட்டின் பரப்பளவு 18 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இருந்து 75,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த இந்திய பரப்பளவில் 2.4% ஆகும்.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்து, காப்புக்காடுகள் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. அதன்படி கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியிருந்த தமிழகத்தின் முதுமலை, ஆனைமலை ஆகிய பகுதிகள் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த ஆண்டுகளிலிலும் புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விவரப்படி, 2006 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்த விவரங்கள்:

2006 - 1,411

2010 - 1,706

2014 - 2,226

2018 - 2,967

2022 - 3,167

2022ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை புலிகள் காப்பகங்களின் செயல்பாடு கடந்த ஆண்டை விட சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த மூன்று காப்பகங்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அம்சங்கள் - தமிழ்நாடு புலிகள் காப்பகங்கள் சிறந்தவை. சிறந்த மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தமிழக குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலிகள் பாதுகாப்பு திட்டம், 50வது ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில், தமிழ்நாட்டின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...