உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் நன்கொடை வழங்குவதற்கு முன்பே ரசீது எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.200 க்கான நன்கொடைக்கு ரூ.100 மதிப்பிலான ரசீது வழங்கப்படுவதாக பக்தர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுன் துவங்கியது. தினமும் கோவில் வளாகத்தில் உள்ள கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பூவோடு வழிபாடும் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் தினமும் ஏராளமானோர் பூவோடு எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓலிப்பெருக்கி மூலம் கோவில் பகுதியில் நன்கொடை வழங்குபவர்கள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நன்கொடை வழங்கும் இடத்தில் தற்சமயம் பெரும் முறைகேடு நடந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது ரூ.200 ரூபாய் நன்கொடை வழங்கினால் ரூ.100 ரூபாய்க்கான ரசிது வழங்கி வருகிறார்கள்.

அதாவது, பக்தர்கள் நன்கொடை வழங்கும் நேரத்தில் தான் ரசீது எடுத்து தர வேண்டும் ஆனால் இந்துசமய அறநிலைய ஊழியர்கள் ஏற்கனவே எடுத்து வைத்த ரசீதுகளை கொடுத்து வருகிறார்கள்.



இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கேட்டால் கூட்ட நெரிசலில் அப்பொழுது எடுக்க முடியாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளோம் என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க செயல் அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் யாரும் இருப்பது இல்லை.

ஆகையால் நன்கொடை வழங்கும் இடத்தில் பெரும் முறைகேடு நடந்து வருவதால் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி உடுமலை மாரியம்மன் கோவில் கல ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே தேர்த்திருவிழா சமயத்தில் கூட செயல் அலுவலர், அலுவலகத்தில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...