பழங்குடியினருக்கு சாதிச்சான்று வழங்குவதை காரணமின்றி தாமதிக்க கூடாது..! - கோவை ஆட்சியர் திட்டவட்டம்!

பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சிகூட்டம் இன்றும் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு இணையவழியில் சாதிச் சான்றிதழ்களை விரைவாக வழங்குதல் தொடர்பாக சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. மண்டல அளவிலான பயிற்சியை மானுடவியலாளரான முனைவர் காளிதாஸ் பயிற்சி வழங்கினார்.



இப்பயிற்சி வகுப்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) / மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) சுரேஷ், மற்றும் திருப்பூர், நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.



இப்பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கிராந்திகுமார் பாடி, பழங்குடியின மக்கள், கடந்த காலங்களில் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த இடங்களில் வாழ்வார்கள், அவர்களின் கலாச்சாரம், மொழி பற்றி அறிந்துகொள்வதும் பழங்குடியின சாதிசான்றிதழ் வழங்குவதும் எளிதாக இருந்தது.

ஆனால் தற்போதைய காலத்தில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் வாழ்கின்றனர். நவீன கல்வி பயின்ற பழங்குடியின மக்களின் பேசும் மொழி கலாச்சாரங்கள் மாறி உள்ளது.

பழங்குடியின மக்களின் பூர்வீகம், வனம் அல்லது மலை பகுதிகளாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு, வேலை விஷயமாக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும், பழங்குடியின மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கும்போது, சரியானவர்களுக்கு உரிய காலத்தில் விரைவாக வழங்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்க தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது.

பழங்குடியினர் ஏதாவது ஒரு அரசுப் பணியில் இருக்கலாம், படித்து கொண்டு இருக்கலாம், அவர்களுக்கு அந்த சான்றிதழ் மிக அவசியமானதாகும். பழங்குடியினர் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக கண்காணிப்பு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

இப்பயிற்சி வகுப்பினை நன்முறையில் பயன்படுத்தி சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...