மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 2,438.16 குவிண்டால் பருத்தியானது. ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 785 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனிடையே, பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மூலனூரில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



இந்நிலையில், வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,328-கும், குறைந்தபட்சவிலை ரூ.6,700-கும் சராசரி விலை ரூ.7,550ற்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மொத்த அளவு 7,909 மூட்டைகளாகும்.

மொத்தம் 2438.16 குவிண்டால் பருத்தியானது, ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 28 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றதாகவும் திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்தார்.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...