கிணத்துக்கடவு அருகே பாறைகற்களை ஏற்றிவந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பாறைக்கற்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் ரூ.96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக பாறைகற்களை ஏற்றி, கேரளா மாநிலத்திற்கு லாரிகள் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இதுகுறித்து, கனிமவளத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர். முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் அருகில் அதிகபாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அளவுக்கு அதிகமாக பாறை கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சிறைபிடித்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...