திரைப்படமாக உருவாகிறது கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடு சுயசரிதை - கதை நாயகனாக நடிக்கும் மாதவன்!

திரைப்பட நடிகர் மாதவன் நடிப்பில் கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் சுயசரிதை திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அவர் கண்டுபிடித்த கருவிகள் ஏராளம்.

ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, கீ வால் கிளாக், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டட கலவை, எலக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என ஜி.டி.நாயடு கண்டுபிடித்த கருவிகள் பட்டியல் வெகுநீளம்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்காக வழங்கிய ஜி.டி.நாயுடு குறித்து இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்ல வேண்டும் எனும் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து படம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் ஜி.டி.நாயுடு வாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பழைய காரை பார்த்தபடி ஜி.டி.நாயுடு நின்றபடி உள்ளது. மேலும், மாதவன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு கண்டுபிடிப்புகளால் கோவை நகருக்கு பெருமை சேர்த்த ஜி.டி.நாயுடு-வின் பயோபிக் படம் உருவாவதை அறிந்து கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...