கோவை துடியலூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் வினோத்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.

இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...