உடுமலையில் தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு!

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகம் முன்பு மாணவிகள் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் மாணவியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சின்னங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்று வது, இரண்டு சக்கர வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து, வாகன ஓட்டுனர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...