ஆதிதிராவிடர் மக்களின் நிலத்தை வாங்கி முறைகேடு - பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து பெற்றவர்களிடம் இருந்து மீட்டு, நிலம் இல்லாத மக்களுக்கு பெற்றுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு 196 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.



இந்த இடத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட சிலர், அங்கு வீடு கட்டி குடியேறாமல் நிலத்தை விற்றுள்ளனர்.



பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டதாகவும் கூறி நிலம் கிடைக்காத ஆதி திராவிடர் மக்கள், மகாத்மா காந்தி ஆசிரமத்தினருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவர்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணத்தாசை காட்டி அவர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெற்று, உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறிந்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு பெற்று தர வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...