தாராபுரத்தில் அரசு பேருந்து ஜப்தி - அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அரசு பேருந்தை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் கவுண்டர் மகன் தங்கவேல்(45). இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்து கிழே விழுந்த தங்கவேல் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கவேலின் தந்தை, தாராபுரம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்கவேல் குடும்பத்திற்கு ரூ.7.38லட்சம் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.. மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

தாராபுரம்-பழனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...