கோவையில் டிபன் கடைக்காரரிடம் ரூ.70 ஆயிரம் திருடிய இளைஞர்!

கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(52). டிபன் கடை உரிமையாளரான இவர், புலியகுளத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்த போது ஏடிஎம் கார்டு சிக்கி கொண்டது. அதை எடுத்து தருவதாக கூறி ரூ.70ஆயிரம் பணத்தை இளைஞர் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஏடிஎம் மையத்தில் சிக்கிய கார்டை எடுத்து தருவதாக கூறி ரூ.70ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(52). டிபன் கடை உரிமையாளரான இவர், புலியகுளத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் 3 கட்டங்களாக ரூ.14 ஆயிரம் எடுத்துள்ளார்.

அப்போது திடீரென அவரது ஏ.டி.எம்., கார்டு இந்திரத்தில் சிக்கி கொண்டது. ஜான் சேவியர் எவ்வளவு முயற்சி செய்து எடுக்க முடியவில்லை. இதனை வெளியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் பார்த்தார்.

பின்னர் அவரே ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து என்னவென்று விசாரித்தபோது, ஜான்சேவியரும் நடந்ததை தெரிவித்தார். உடனே அந்த இளைஞர், தான் உங்களுக்கு உதவுகிறேன் எனவும், அதற்கு நீங்கள் உங்கள் ரகசிய எண்ணை தெரிவித்தால் உங்களின் ஏ.டி.எம். கார்டை எடுத்து தருகிறேன் என்றார்.

அதை நம்பிய ஜான் சேவியரும் கார்டை எடுத்து தருகிறார் என்பதால், அந்த இளைஞரிடம் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். ரகசிய எண்ணை பெற்று கொண்டு இளைஞர் உள்ளே சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்த இளைஞர், கார்டை எடுத்து விட்டதாக கூறி ஜான் சேவியரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

இதனை உண்மை என நினைத்து அந்த கார்டை வாங்கி கொண்டு ஜான் சேவியர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜான் சேவியருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.70 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஜான் சேவியர் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அவர்களும் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். கார்டு தன்னிடம் இருக்கும்போது எப்படி பணம் எடுக்க முடியும் என யோசித்தார். அப்போது தான் அவருக்கு அந்த இளைஞரின் நியாபகம் வந்தது.

தனக்கு உதவுவது போல் நடித்து, தனது ஏ.டி.எம். கார்டை அவர் எடுத்து கொண்டு, வேறொரு கார்டை தன்னிடம் கொடுத்ததும், தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...