தொழிலுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.! - போசியா அமைப்பு வலியுறுத்தல்

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல என்று போசியா அமைப்பு கண்டித்துள்ளது.


கோவை: நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவை நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.



இதில் ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில்துறையினர் சார்பில், மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மாநில ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளனர்.



இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தொழில் செய்து வரும் நிலையில், அவற்றை முடக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில்முனைவோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் துறை சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...