உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு உடுமலை - தளி சாலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.
திருப்பூர்: உடுமலை அருகே ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ரம்ஜான் காலம் என்பதால் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு உடுமலை - தளி ரோட்டில் உள்ள சன் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் கலந்து கொண்டு நோன்பின் சிறப்பு சமய நல்லிணக்கம் பேணுதல் குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சமரசம் மாத இதழ் பொறுப்பாசிரியர் முஹம்மது அமீன் புத்தகங்களை பரிசளித்தார்.
சமய நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.