கோவையில் முதல்வர் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி - பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி வருகின்ற 7ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் முதல்வர் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சிக்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைபடகண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.

வ.உ.சி மைதானத்தில் வருகிற 7ஆம் தேதி இந்த புகைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது. கண்காட்சியானது வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புகைப்பட காண்காட்சியை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை.

இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. இதில் கோவைக்கு முதலமைச்சர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரப்படுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள் என்றார்.

மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார். இதில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...