பொய் வழக்கில் கணவர் கைது எனப் புகார் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

தன்னுடைய கணவர் தனசேகர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக கூறி, திருப்பூர் வஉசி நகரை சேர்ந்த தனசேகர் மனைவி ஜான்சி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக அன்றைய தினமே தனசேகரின் மனைவி ஜான்சி மற்றும் உறவினர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனசேகரனின் மனைவி ஜான்சி, தனது கணவர் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து கைதுசெய்துள்ளதாகவும், இதனால் தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறியதோடு, இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...