ஈஷா மையத்திற்கு பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவல் துறையினர்

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருவதை முன்னிட்டு 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை கோவை வருகின்றார்.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மையத்தினை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி தலைமையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு (என்.எஸ்.ஜி) மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு, இந்திய விமானப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் தொடந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதில், வானிலை மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் விமான நிலையத்தில் இருந்து தரைவழி பயணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல குண்டு துளைக்காக காரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியான செம்மேடு, முட்டத்துவயல், இருட்டுபள்ளம், ஆலாந்துறை ஆகிய பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...