அதிக கட்டணம்: கோவை - சிங்கப்பூர் விமானத்தில் சரக்கு போக்குவரத்து பாதிப்பு!

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் சரக்கு கையாள்வதற்கான கட்டணம் கிலோவுக்கு ரூ.130 வசூலிக்கப்படுவதால், குறைவான சரக்குகளே கையாளப்படுவதாகவும், கட்டணம் குறைவாக உள்ள திருச்சி-ரூ.100 மற்றும் கொச்சின்-ரூ.70 விமான நிலையங்களில் இருந்து அதிகளவு சரக்குகள் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் சரக்குகள் கையாள்தற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சரக்குகள் கையாளப்படுவது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானத்தில், சரக்குகள் கையாள அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் மிக குறைந்த அளவே சரக்குகள் கையாளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம், மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில் சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவே கையாளப்படுகின்றன. திருச்சி, கொச்சின் விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் அதிக கட்டணம் வசூலிப்பது தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆனால் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படும் போதும் வாரம்தோறும் அதிகபட்சமாக 3 டன், மேலும், ஒரு சில வாரங்களில் அதற்கு குறைவாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.

உதாரணமாக கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் ரூ.100 மற்றும் கொச்சினில் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு சரக்குகள் கையாளப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் பிரத்யேக அலுவலகத்தை திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அலுவலகம் திறக்கப்பட்ட பின் கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு பொறியியல் துறை சார்ந்த மற்றும் உணவு பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு சரக்குகள் கையாள தற்போது விதிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...