கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு - மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கொன்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4,436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1340 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அறையினை ஆண்டுக்கு நான்குமுறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.



இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குணசேகரன், மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...